‘தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி’.. ‘திடீரென இடிந்து விழுந்த வீடு’.. தொடர் கனமழையால் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 31, 2019 06:13 PM

தொடர் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

75 year old woman died in Kanyakumari due to heavy rain

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ‘கியார்’ புயலை தொடர்ந்து தற்போது ‘மஹா’ புயல் அரபிக்கடலில் உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மூதாட்டி ஒருவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த பாட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மதனலீலா (75). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தொடர் கனமழை பெய்ததால் திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டி மதனலீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

Photo Credits: Vikatan

Tags : #KANYAKUMARI #WOMAN #DIES #HEAVYRAIN