‘செல்ஃபி மோகம்’.. நொடியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 30, 2019 10:55 AM

செல்ஃபி ஆர்வத்தால் அருவியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thiruvannamalai young dies when he takes selfie on waterfalls

திருவண்ணாமலை மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முரளி (22). இவர் இவரது நண்பர் மணிகண்டன் (19) என்பவருடன் திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பீமா என்ற அருவிக்கு சென்றுள்ளனர். அப்போது முரளி அருவி அருகே இருந்த பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி முரளி கீழே விழுந்துள்ளார். உடனே முரளி காப்பாற்ற எண்ணி மணிகண்டனும் குதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் நான்கு மணிநேர போராட்டத்துக்குபின் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : #CRIME #THIRUVANNAMALAI #SELFIE #YOUNG #DIES #WATERFALLS