‘வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை’.. தேடிச்சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 30, 2019 04:36 PM

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baby dies after falling into rainwater harvesting tank in Virudhunagar

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ருத்ரன் (3). ஆமத்தூர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தாத்தா வீட்டுக்கு ருத்ரன் சென்றுள்ளான். இன்று காலை வீட்டின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். இந்நிலையில் குழந்தையை தேடி குடும்பத்தினர் சென்றுள்ளனர். ஆனால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாததால் பதறிய குடும்பத்தினர் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சிறுவன் கிடந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ருத்ரனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIRUDHUNAGAR #CHILD #DIES #RAINWATERHARVESTING