'கொழந்தை' போல வளத்தாங்க... சினையாக இருந்த 'பசுமாட்டை' காப்பாற்ற சென்று... 'உயிரிழந்த' 3 குழந்தைகளின் தாய்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 13, 2020 11:12 PM

சினையாக இருந்த பசுமாட்டை காப்பாற்ற சென்று பெண் உயிரிழந்த சம்பவம் ஒரத்தநாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Woman Died by Accident Near Thanjavur, Police Investigate

ஒரத்தநாடு அருகேயுள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி சரோஜா (53) இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  விவசாய வேலைகளுடன் இருவரும் மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். சம்பவ தினத்தன்று தன்னுடைய வீட்டில் சினையாக இருந்த பசுமாட்டை சரோஜா மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். மாட்டை மேயவிட்டு அவர் வயலில் தன்னுடைய வேலைகளை பார்த்திருக்கிறார். அப்போது கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்து உயிருக்கு போராடியுள்ளது.

இதைப்பார்த்த சரோஜா சற்றும் யோசிக்காமல் பசுமாட்டை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது சரோஜா மீதும் மின்சாரம் பாய பசுமாட்டுடன் சேர்ந்து சரோஜாவும் உயிரிழந்து விட்டார். இதைப்பார்த்த கிராமத்தினர் அப்பகுதியில் கூடி உருக்கத்துடன் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து மின்சார வாரியத்திற்கும், போலீசாருக்கும் கிராம மக்கள் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.