எப்பவும் போல காலையில ஒரே 'தகராறு'... ஆனாலும் கொஞ்சம் கோட 'யோசிக்காம'... கடைக்குட்டி மகனால் 'தாய்க்கு' நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற மகனே தாயை கொலை செய்த கொடூரம் மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். வீட்டின் கடைசிப்பையனான மாயக்கண்ணன் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மாயக்கண்ணனுக்கும் அவரது தாய் செல்விக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி பார்த்து வந்துள்ளனர். அதேபோல நேற்று காலையில் மாயக்கண்ணனுக்கும் அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கொஞ்சமும் இரக்கமில்லாமல் வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து கொடூரமாக வெட்டியதில் பலத்த காயமடைந்த தாய் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாயக்கண்ணனை கைது செய்த போலீசார் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
