'வெவசாயம்' பண்ணியாவது பொழைச்சுப்பேன்... மனைவி-குழந்தைகளுடன் 'சைக்கிளில்' பயணித்த... கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் பெமேதரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா சகு. இவரது மனைவி பிரமிளா. இந்த தம்பதியர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கிருஷ்ணா ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்து தனது சைக்கிளேலேயே மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கிளம்பியுள்ளார்.
லக்னோ அருகே வந்த போது அவரது மிதிவண்டியில் வேறொரு வாகனம் மோதி விபத்தில் சிக்க கிருஷ்ணாவும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். அவரது இரண்டு குழந்தைகளும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிருஷ்ணாவின் உறவினர் ஒருவர் பேசுகையில், 'சத்தீஸ்கரில் வறுமையின் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார். அதனால் சொந்த ஊர் சென்று விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என எண்ணி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார்' என்றார்.
மேலும், 'மாதம் வெறும் 800 ருபாய் சம்பளத்துடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த கிருஷ்ணாவின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் யாரும் முன்வந்து கிருஷ்ணாவுக்கு உதவி செய்யவில்லை. மேலும் ரெயிலில் சொந்த ஊர் செல்ல தனது பெயரை முன்பதிவு செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதுவும் கை கூடவில்லை' என தெரிவித்தார். கிருஷ்ணாவின் மீதிவண்டி மீது மோதி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
