"அப்பாவால நடக்க முடியாது!".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'!.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | May 12, 2020 11:32 PM

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்மோனி கோகேயி என்கிற 20 வயதான இளம் பெண், 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில் ஜான்மோனி சைக்கிளில் சென்று சந்தையில் காய்கறிகளை விற்று வரும் தனது தாய்க்கு உதவியாக இருந்து வருகிறார்.

cops offer young girl 2 wheeler who sells vegetables in bicycle

இதுபற்றி பேசிய அவர், “18 ஆண்டுகளாக தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் நடக்கவும் முடியாது. அம்மா போர்பருவா சந்தையில் காய்கறிகளை விற்கிறார். அவருக்கு நான் உதவியாக இருந்து வருகிறேன்” என்று கூறினார். ஆனால் ஊரடங்கினால் சந்தைக்கு செல்ல முடியாததால், சைக்கிளில் காய்கறிகளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்று வந்துள்ளார்.

இதை அறிந்த எஸ்.பி அப்பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தை பெண் காவலர்கள் மூலம் வீட்டுக்கே சென்று பரிசாக அளிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அப்பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதுபற்றி பேசிய காவல் கண்காளிப்பாளர்,  “அப்பெண்ணின் சுயமரியாதைதான் அவளுக்கு பண உதவி பெறுவதைத் தடுத்தது. அதனால் அவள் காய்கறி விற்பதற்கு ஏதுவாக காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கிணங்க இருசக்கர வாகனத்தை பரிசாக அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.