'ஏ.டி.எம். மெஷினை' இப்படி கூட 'பயன்படுத்தலாமா?...' 'கொரோனா நேரத்தில்...' சூப்பர் ஐடியாவை' கையில் எடுத்துள்ள 'நாடு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 13, 2020 10:37 PM

இந்தோனேசியாவில் ஏ.டி.எம். மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

ATMs in Indonesia Free rice is provided to the poor

இந்தோனேசியாவில் கொரோனாவால் 14 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.

அங்கு கடந்த 6 வாரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு ஏ.டி.எம். இயந்திரம் மூலம் இலவச அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரிசி ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு தினமும் ஆயிரம் பேருக்கு 1.5 டன் அளவு அரிசி வினியோகிக்கப்படுகிறது.