பெண்கள் விடுதியில்... 7 அடி நீள நாகப் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு... அதிர்ந்த மாணவிகள்... வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில், ஏழு அடி நீள நாகப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, 90 சதவிகித மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் சில மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர். இதற்கிடையில், திடீரென பெண்கள் விடுதிக்குள் பாம்பு புகுந்ததால் பதற்றமடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அலறி ஓடினர்.
ஏழு அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு இங்கும் அங்குமாக ஓடியதை கண்டு மாணவிகள் அச்சமுற்றனர். இதனைக் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பாம்பை பிடித்துச் சென்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் என்பதால், பாம்புகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
#WATCH Tamil Nadu: A cobra entered into girls’ hostel of Bharathiar University campus in Coimbatore, earlier today. pic.twitter.com/qGRFy6lsOY
— ANI (@ANI) January 18, 2020
