ஆசிரியை உதவியுடன் டியூஷன் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்.. பாய்ந்தது குண்டர் சட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 31, 2019 03:54 PM
டியூசன் படிக்கச் சென்ற மாணவியை மிரட்டி வீடியோ எடுத்ததோடு, பாலியல் தொல்லையும் கொடுத்துவந்த நபர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலாஜி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று, வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருந்ததும், சில மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய காதலியான, ஆசிரியை சஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
