ஆசிரியர்களால்... 10-ம் வகுப்பு மாணவிக்கு வந்த சோகம்... அதிர்ந்து நின்ற ஊர் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 10, 2020 09:12 AM

தருமபுரி அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

female student sexually harassed by history teachers

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வரலாறு பாட ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் லட்சுமணன் (38), சின்னமுத்து (34). இவர்கள் இருவரும் அரூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு வந்து பணிபுரிந்து வந்தனர். பள்ளிக்கு வரும்போது நேரங்களில் குடிபோதையிலும் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த ஆசிரியர்கள்  இருவரும், அதேப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு,  காதல் கவிதைகள், ஆபாச வார்த்தைகள், ஆபாச படங்களை அனுப்பி செல்ஃபோன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கேட்டபோது, வெளியில் யாரிடமாவது கூறினால் மதிப்பெண்களை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் 2 பேரும், அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அந்த மாணவி பாலியல் தொல்லை குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் இருவரும் மாணவியிடம் அத்து மீறி நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மாலையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுது உள்ளார்.

இது ஊர் மக்களுக்கு தெரியவர உறைந்துபோன அவர்கள், நேற்று காலை 10.30 மணியளவில் 100-க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கு திரண்டு சென்று ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் சரியான பதில் கூறாததால், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான தலைமை ஆசிரியர் முருகேசனிடம் சென்று முறையிட்டுள்ளனர். அவரும் சரியான பதில் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் ஆசிரியர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

இதையறிந்து அங்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிரு‌‌ஷ்ணன் கூறுகையில், ‘பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றோம். ஆசிரியர்கள் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : #TEACHERS #HISTORY #STUDENTS