நம்பிக்கை துரோகம் செய்ததாகக் கூறி.... பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண்ணை... சித்தப்பா செய்த காரியத்தால்... அதிர்ந்த பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 09, 2020 08:06 PM

கோவையில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை, சித்தப்பாவே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore woman attacked by her uncle in bus stand

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே. நகர் பகுதியில் இன்று காலை பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம்பெண்ணை. வயதான நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கத்தியால் தாக்கியதில், கைகளில் இரண்டு இடங்களில் பலத்த காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கத்தியால் குத்திய நபர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி துரைராஜ் என்பதும், அவரது மனைவியின் அக்காள் மகளான மாது என்ற இளம் பெண் தான் கத்திகுத்து வாங்கியதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்ட மாது, பின்னர் மாமியார் கொடுமை செய்வதாகக் கூறி கணவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு சித்தி - சித்தப்பா வீடு என்ற முறையில் துரைராஜின் குடும்பத்துடன், அவர்களது வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 5 சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாது பல ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி வந்ததாகத் தெரிகிறது. இதனால் துரைராஜ் மாதுவின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் தான் துடியலூர் அடுத்த வி.எஸ்.கே நகரில் மாது தங்கி இருப்பதாகவும், தினமும் காலையில் அங்கிருக்கும் பேருந்து நிலையத்திற்கு வருவதாகவும் துரைராஜிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் புதன்கிழமை இரவு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்ட அவர், கோவைக்கு சென்று வி.எஸ்.கே நகர் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார். காலையில் பேருந்து நிலையத்திற்கு வந்த மாதுவை கண்ட அவர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அவரது தோள்பட்டை கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற தெரியவந்தது. மாதுவை கத்தியால் குத்தியப் பிறகு, தனது செல்ஃபோன் மூலம் மனைவியிடம் கூறிய துரைராஜ், துரோகம் செய்தால் பரவாயில்லை நம்பிக்கை துரோகம் செய்தால் இது தான் கதி எனக் கூறியது அங்கிருந்தவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

Tags : #COIMBATORE #WOMAN #ATTACKED #UNCLE