‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 04, 2020 12:29 PM

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tuticorin Man kills friend who shot wife bathing video

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த கம்மாப்பட்டியை சேர்ந்தவர் மில்டன்ராஜ். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கட்டிட தொழிலாளியான இவர் அதே ஊரை சேர்ந்த கொத்தனார் விஜயன் என்பருடன் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி அப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத் திருவிழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு மில்டன்ராஜ் சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

இதனிடையே கயத்தார் செட்டிகுறிச்சி அருகே சாலையோர தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது மில்டன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவரது செல்போனை சோதனை செய்தபோது, கடைசியாக விஜயனிடம் பேசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், நானும் மில்டன்ராஜும் ஒன்றாகவே வேலைக்கு செல்வோம், மது அருந்துவோம். ஒரு நாள் மது அருந்தியபோது மில்டன்ராஜ் அவரது செல்போனில் உள்ள வீடியோ ஒன்றை காண்பித்தார். அதில் என் மனைவியின் குளிக்கும் வீடியோ இருந்தது. இதனால் எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தான் கேட்கும் பணத்தை கொடுத்தால் வீடியோ அழித்துவிடுவதாக மில்டன்ராஜ் கூறினார்.

பணத்தை ஏற்பாடு செய்ய சில நாட்கள் அவகாசம் கேட்டேன். பின்னர் கடந்த 25ம் தேதி மில்டன்ராஜுக்கு போன் செய்து, இன்னைக்கு வேலைக்கு வா, வேலை முடிஞ்சது பணம் தருகிறேன் என கூறினேன். உடனே அவரும் என்னுடன் பைக்கில் வந்தார். கயத்தாறு செட்டிகுறிச்சி அருகே வந்ததும், தயாராக இருந்த எனது நண்பர்களுக்கு போன் செய்தேன். அங்கு அனைவரும் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மில்டன்ராஜை குத்திக் கொலை செய்துவிட்டு, செல்போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டோம் என அவர் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #TUTICORIN #FRIEND #WIFE