'விவசாயிகளுக்கு' வழிவிட்டு ஒதுங்கி சென்ற 'சிங்கங்கள்'... தலைவர் 'ரொமான்ஸ்' மூடில் இருந்ததால் 'உயிர் தப்பிய' அதிசயம் ... 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 04, 2020 12:17 PM

ஆளில்லாத காட்டுப்பாதையில் இருச்சக்கர  வாகனத்தில் வந்த விவசாயிகளுக்கு எதிரே வந்த சிங்கக் கூட்டம் ஒன்று வழிவிட்டு ஒதுங்கிச் சென்ற அதிசய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The lion\'s way out of the farmer\'s way-Viral Video

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் கோதியானா என்ற இடத்தில், ஆளில்லாத காட்டுப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் விவசாயிகள் சிலர் வந்துள்ளனர்.

அப்போது எதிரே சிங்கக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. இதனால் பதறிப் போன விவசாயிகள் வண்டியை நிறுத்திவிட்டு அப்படியே அசையாமல் நிற்க முயற்சித்தனர். என்ன நினைத்ததோ தெரியவில்லை சிங்கக் கூட்டம் விவசாயிகளை பார்த்ததும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நல்ல பிள்ளை போன்று ஒதுங்கி வழிவிட்டு சென்று விட்டன.

 

இதுகுறித்து பேசிய கிராம மக்கள், சிங்கங்கள் இவ்வழியாக வந்த போதும் தங்களை  இதுவரை தாக்கியதில்லை என்று தெரிவித்தனர். இந்த வீடியோவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி. பரிமல் நத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags : #GUJARAT #LIONS #FORMERS #WAY OUT #VIRAL VIDEO