‘தங்கையின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’... வீடியோ அனுப்பி ‘மனைவியை’ மிரட்டிய ‘சென்னை’ இளைஞர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 31, 2020 12:05 PM

சென்னையில் மனைவியுடைய தங்கையின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chennai Man Blackmails Wife With Sisters Obscene Video

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (31). இவருக்கு 28 வயதில் மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்துவந்ததால் கோபித்துக்கொண்டு அவருடைய மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்றிரவு மனைவிக்கு போன் செய்த தினேஷ், “என்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் உன்னுடைய தங்கையின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். மேலும் மனைவியின் உறவினர்கள் 2 பேரின் செல்போனுக்கு அவருடைய தங்கை குளியல் அறையில் இருக்கும் வீடியோவையும் அனுப்பியுள்ளார்.

தினேஷின் செயலால் அதிர்ந்துபோன அவருடைய மனைவி உடனடியாக இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தினேஷைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினேஷின் மனைவியைப் பார்க்க அவருடைய தங்கை அடிக்கடி வீட்டிற்கு வந்தபோது அவர் அந்த வீடியோக்களை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : #CRIME #CHENNAI #HUSBAND #WIFE #SISTER #VIDEO