‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை வண்டியூர் அருகே போதைக்கு அடிமையான தம்பியை அண்ணன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வண்டியூரைச் சேர்ந்த தம்பதி சிக்கந்தர் மைதீன் - ஹபீபா பேகம். இவர்களுடைய மகன்கள் யாசர் அராபத், அசாருதீன். போதைப் பழக்கத்திற்கு அடிமையான அசாருதீன் அடிக்கடி தந்தையையும், தாயையும் பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் அண்ணன் யாசரிடமும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹபீபா பேகம் மற்றும் யாசர் அராபத் இருவரும் சேர்ந்து அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று அசாருதீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், அவருடைய தாய் மற்றும் அண்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
