'திடீரென வந்த சண்டை'... 'சென்னையில் பிரபல தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிற்சாலை மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நீலம்சின்ஹா என்ற ஊழியர், தனது சக ஊழியரான கிரிஜேஷ்குமார் என்பரை நோக்கி துப்பக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரிஜேஷ்குமார் மீது ஆறு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த கிரிஜேஷ்குமார் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நீலம்சின்ஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சக ஊழியர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் ஆவடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
