கொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 01, 2020 10:09 PM

உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர் அவருடைய தலையுடன் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Man Murders Wife Walks With Her Severed Head For 1.5 Km

உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி அகிலேஷ் ராவத் (30) - ரஜனி (25). இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது. அதன்பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அகிலேஷ் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி அவரை தரதரவென வீட்டிற்கு வெளியே தள்ளியுள்ளார். பின்னர் ரஜனியை அவர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரஜனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மனைவியைக் கொலை செய்தும் ஆத்திரம் தீராத அகிலேஷ், பட்டப்பகலில் அவருடைய தலையுடன் சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதைப் பார்த்து உறைந்துபோன ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் அகிலேஷை வழிமறித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #UTTARPRADESH #HUSBAND #WIFE #BABY #FAMILY