‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலரான சாம்பசிவம் (35) இன்று கிருமாம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே சாம்பசிவம் காரில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.
அப்போது அவரை துரத்திச் சென்ற கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த படுகொலை முன்விரோதம் காரணமாக நடந்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என சாம்பசிவத்தின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
