‘குடும்பத்துடன் டூர் போன தொழிலதிபர்’.. எதிர்பாராமல் நடந்த கோரவிபத்து.. கணவன், மனைவி அடுத்தடுத்து பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 31, 2020 05:04 PM

நியூஸிலாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.

Indian American couple killed in New Zealand volcanic eruption

அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான பிரதாப் சிங் அவரது மனைவி மயூரி மற்றும் 3 குழந்தைகளுடன் நியூஸிலாந்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் சென்ற தீவில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதில் சிக்கிய மயூரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாமடைந்த பிரதாப் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவம் நடைபெறும் போது இவர்களின் மூன்று குழந்தைகளும் கப்பலில் தங்கியிருந்துள்ளனர். அதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிழைத்தனர். மேலும் இந்த எரிமலையில் சிக்கி 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னரே இந்த தீவில் எரிமலை குறித்து எச்சரிக்கை பிரகடனம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : #ACCIDENT #KILLED #VOLCANIC #NEWZEALAND #HUSBANDANDWIFE