‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 03, 2020 08:07 PM

திரைப்பட பாணியில் நண்பனைக் கொலை செய்து புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Nagpur 3 Men Carry Out Movie Style Murder Bury Body In Food Stall

மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த திலீப் (32) என்பவர் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். அவருடைய நண்பர் தாக்கூர் அதே பகுதியில் சாலையோரம் உணவுக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாக்கூருக்கும், திலீப்பின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்ட திலீப் தன் வீட்டை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு, தாக்கூரையும் நேரில் சந்தித்து தன் மனைவியிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தாக்கூர் திலீப்பை சுத்தியலால் தாக்க அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து இருவரை துணைக்கு அழைத்த தாக்கூர், உணவுக்கடையின் பின்புறம் பெரிய குழி ஒன்றைத் தோண்டி திலீப்பின் உடலைப் புதைத்துள்ளார். மேலும் அந்தக் குழியில் 50 கிலோ உப்பையும் கொட்டி மண்ணுடன் சேர்த்து அவர் மூடியுள்ளார். அதன்பிறகு எதுவுமே நடக்காததுபோல அவர் தன் வேலைகளை கவனித்துவந்துள்ளார். இதற்கிடையே திலீப்பைக் காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு தாக்கூரின்மீது சந்தேகம் வர, அவரைக் கண்காணித்து வந்துள்ளனர்.

பின்னர் போலீசார் தாக்கூரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்ததில் திலீப்பைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணையில் அவர் அளித்த தகவலின்படி, புதைக்கப்பட்ட திலீப்பின் உடல் மற்றும் பைக்கை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியில் வெளியான த்ரிஷியம் படத்தில் வருவது போல திலீப்பின் செல்போனை லாரியில் வீசிவிட்டு, உடலைப் புதைத்துவிட்டு தப்பிக்க நினைத்தாக தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Tags : #CRIME #MURDER #FRIENDS #NAGPUR #MOVIE