'நள்ளிரவில் வந்த முகமூடி கும்பல்'.. 'தாயின் கண் முன்னே ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பரிதாபம்'.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 11:15 PM

விருதுநகரில் அல்லம்பட்டியில் ரியல் எஸ்டேட் தொழிலுடன் இரும்பு கடையும் நடத்திவந்த சண்முகவேல் ராஜா என்பவர், இரவு நேரம் கடையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

TN unknown gang kills a man infront of his mother

அந்த சமயம் அவரது வீட்டு முன்னாள் நின்ற அவரை, முகமூடியும், ஹெல்மெட்டும் அணிந்துவந்த 6 பேர் வந்து சரமாரியாக வெட்டினர். அப்போது அதனை பார்த்து சண்முக வேலின் தாயார் தடுக்க முற்பட்டார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் வெட்டி சாய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர்கள் மீது அந்தத் தாயார் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளார்.

ஆனால் அதற்குள் அனைவரும் தப்பியோடியுள்ளனர். சண்முகவேல் ராஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் கண் முன்னே மகனை வெட்டிவிட்டுச் சென்ற அந்த கும்பலை பிடிக்க உடனடியாக காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டதன் பேரில், போலீஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலையில் முதல் குற்றவாளி என கூறப்படும் சண்முகவேல் ராஜா, அக்கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக கொல்லப்பட்டாரா அல்லது தொழில் போட்டியா அல்லது அரசியல் காரணங்களா என்கிற பல கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலைச் சம்பவம் சிசிடிவி காட்சிகளாகவும் இணையத்தில் வலம் வந்து பதைபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Tags : #ASSAULT #MOTHER #VIRUDHUNAGAR #CCTVFOOTAGE