'வியாபாரத்தில் நஷ்டம்'.. தொழிலதிபரின் குடும்பமே எடுத்த முடிவு.. 'தமிழகத்தை உலுக்கிய சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 11, 2019 12:38 PM

தொழிலில் நஷ்டமடைந்ததால் மனமுடைந்த தொழிலதிபரின் குடும்பமே தற்கொலைக்கு முயன்றதில் தந்தை மற்றும் மகன் ஆகிய 2 பேர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TN coriander mill owner and his son commits suicide

விருதுநகர் பெரியவள்ளி குளம் பகுதியில் மல்லி மில் நடத்தி வந்தவர்தான், ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்த 65 வயதான இன்பமூர்த்தி. இவரது வியாபாரத்தில் உண்டான நஷ்டம் காரணமாக சுமார் 40 லட்சம் வரை கடனில் மூழ்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் குடும்பமே சேர்ந்து ஒரு விபரீத முடிவுக்கு துணிந்தது.

இந்த நிலையில்தான் இன்று அதிகாலை தங்களது மில்லிலேயே இன்பமூர்த்தி, அவரது மனைவி திலகவதி, மகன் கண்ணன்(40) மூவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் இன்பமூர்த்தியும் கண்ணனும் இறந்துவிட, திலகவதி மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலையில் பணியாளர் வந்து மில்லைத் திறந்தபோதுதான் இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு திலகவதியை மருத்துவமனைக்கும், உயிரிழந்த தந்தையையும் மகனையும் பிரேத பரிசோதனைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்பாக இன்பமூர்த்தி எழுதி வைத்திருந்த கடிதத்தில்

தற்கொலை எதற்கும் முடிவாகாது. மனித உயிரும் அதன் ஆற்றலும் விலைமதிக்கமுடியாதது என்பதை தற்கொலை நிலைக்குச் சென்று திரும்பிய பலரும் உணர்ந்து தற்போது வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர். தற்கொலை எண்ணம் மேலெழும்போது அதில் இருந்து மீள சினேஹா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஆலோசனை வழங்குகின்றன. அவர்களைத் தொடர்புகொள்ள..

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Tags : #SUICIDEATTEMPT #VIRUDHUNAGAR #BUSINESSMAN