‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 09, 2019 07:12 PM

சென்னை ஐஐடி கல்லூரி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai IIT Madras Girl Student From Kerala Commits Suicide

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப் (18). சென்னை ஐஐடியில் முதலாமாண்டு M.A Humanities படித்து வந்த பாத்திமா கடந்த வாரம் நடைபெற்ற இன்டர்னல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் சஜிதா லதீப் நேற்று இரவு முதல் அவருக்கு கால் செய்தும் பாத்திமா ஃபோனை எடுக்காமலேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சஜிதா இன்று காலை பாத்திமாவின் தோழி ஒருவருக்கு கால் செய்து அவரைக் குறித்து கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பாத்திமாவின் தோழிகள் சென்று அவருடைய அறைக்கதவைத் தட்டிப்பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் திறக்காததால் சந்தேகமடைந்த தோழிகள் உடனடியாக இதுகுறித்து விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது பாத்திமா தூக்கில் சடலமாகத் தொடங்கிய நிலையில் இருந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாத்திமாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முதல்முறையாக குடும்பத்தை பிரிந்து வந்து தனிமையில் இருந்த பாத்திமா தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மணமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதைத்தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CHENNAI #IIT #MADRAS #CAMPUS #HOSTEL #STUDENT #KERALA #GIRL #SUICIDE #MOTHER #FRIENDS