‘டிக்டாக்கில் அதிக லைக்ஸ்’.. ‘உயிருடன் விளையாடிய மகன்’.. ‘புரட்டி எடுத்த தாய்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 07, 2019 07:03 PM

டிக்டாக் வீடியோவில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக இளைஞர் செய்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

TikTok video makes netizens angry video goes viral

டிக்டாக் வீடியோ மோகத்தால் பலரும் தங்களது உயிரை பறிகொடுத்து வருகின்றனர். டிக்டாக்கில் தங்களது வீடியோ அதிக லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக பலரும் விபரீத முடிவுகளில் இறங்குகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆற்றில் டிக்டாக் எடுக்க முயன்று திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது டிக்டாக் வீடியோவுக்கு அதிக லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக, வாயில் ரத்தம் வந்தது போன்று வீட்டு வாசலில் மயங்கி விழுகிறார். அப்போது இதனைப் பார்த்த இளைஞரின் தாய், தன் மகனுக்கு என்ன ஆனது என பதறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார். ஆனால் அந்த இளைஞர் சிரித்துக்கொண்டே எழ, கோபத்தின் உச்சிக்கு சென்ற அவரது தாய் அடித்து வெளுக்கிறார். அதன்பின்னரும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சிறிது நேரம் மூச்சு விட சிரமப்படுகிறார் இளைஞரின் தாய். டிக்டாக் வீடியோவுக்காக தாயின் உயிருடன் விளையாடிய இளைஞருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #TIKTOK #VIRALVIDEO #MOTHER