‘என் குழந்தை கண்ல இருந்து’... ‘ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல’... ‘மருத்துவரின் செயலால்’... ‘வியந்துபோன இளம் தம்பதி’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 13, 2019 03:46 PM

நோய் தாக்குதலால் பாதிப்படைந்த குழந்தைக்கு, ரத்தப் பரிசோதனை செய்யும்போது, மருத்துவரின் செயலை கண்டு, குழந்தையின் தாய், வியந்து ஷேர் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

daughter did\'t cry because of doctor sing during blood test

ஸ்காட்லாந்து இன்வென்ஸ் நகரில் வசித்து வருபவர்கள், மைக் வெம்மிஸ் - ஷேனான் வெம்மிஸ் தம்பதி. இவர்களின் 10 மாத பெண் குழந்தையான கிரேஸி, பிறக்கும்போதே, டவுன் சின்ட்ரோம் (Down syndrome) நோய் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்னதாக, இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) மற்றும் சிறுநீரக சிகிச்சையும் நடைப்பெற்றுள்ளது. இதையடுத்து, கிரேஸிக்கு ரத்தப் பரிசோதனை அடிக்கடி செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

பரிசோதனை மேற்கொள்ளும்போது,  குழந்தையான அவர் வலியில் துடித்து அழுவார். இந்நிலையில், ரெய்க்மோர் மருத்துவமனையில், குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கோயிட்ஸி, கிரேஸிக்கு ரத்த பரிசோதனை செய்ய, ரத்தம் எடுத்துள்ளார். அப்போது 10 மாத குழந்தையான கிரேஸி அழாமல் இருக்க, நாட் கிங் கோலேயின் (Nat King Cole) பாடலான Unforgettable என்ற பாடலை அழகாக பாடி, குழந்தையை அழவிடாமல் பார்த்துகொண்டுள்ளார். அவரின் பாடலை கேட்டு, குழந்தை சிரித்துக்கொண்டே ரத்தம் கொடுத்துள்ளது.

எப்போதும் அழுதுகொண்டே ரத்தம் கொடுக்கும் குழந்தை, ஒரு சொட்டு கூட கண்ணீர் விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தது, பெற்றோருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனைப்  வீடியோவாக பதிவுசெய்த குழந்தையின் தாயான ஷேனான் வெம்மிஸ், அதனை ஃபேஸ்பக்கத்தில் பதிவுசெய்ய, அது தற்போது வைரலாகி வருகிறது. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவரான ரியான் கோயிட்ஸி, மருத்துவம் மட்டுமின்றி, முறையாக இசைப் பயிற்சியும் பெற்றுள்ளார். மற்றவர்கள் பார்ப்பதற்கு இது வேடிக்கையாக தோன்றினாலும், குழந்தைகள் அழாமல் இருக்க, இப்படி பாடுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

Tags : #BLOOD #TEST #SING #SONG #MOTHER #DAUGHTER