'இவ்ளோ வெவரமா?'.. 'யார்ணே நீ?'.. 'சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க கொள்ளையன் செய்த 'பலே' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 14, 2019 09:57 AM

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பெயிண்ட் கடைக்குள் திருடுவதற்காக, மேற்கூரை வழியே குதித்த கொள்ளையன் செய்த காரியம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

TN thief turns CCTV camera during theft in paint store

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனக்குச் சொந்தமான பெயிண்ட் கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

எப்படி பணம் பறிபோனது என்று அறியாத கிருஷ்ணன், தாமதிக்காமல் போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் முதற்கட்ட விசாரணையாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். 

அதில்தான், பெயிண்ட் கடையின் மேற்கூரை வழியே உள் நுழைந்த திருடன், சிசிடிவியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, மேலிருந்து குதித்தவுடன் சிசிடிவி கேமராவில் தான் அகப்படாதவாறு திருப்பி வைத்துவிட்டு, கொள்ளையடித்து முடித்ததும், மீண்டும் சிசிடிவி கேமராவை பழைய மாதிரியே திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவத்தைக் கண்டு போலீஸார் ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #THIEF