‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 11, 2019 07:41 PM
ரயிலில் செல்ஃபோன் திருடனுடன் ஏற்பட்ட சண்டையில் தள்ளிவிடப்பட்ட இளைஞர் ஒருவர் ரயில் ஏறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிலால் ஷேக் என்ற இளைஞர் தனது பக்கத்துவீட்டுக்கார சிறுமிகளுடன் ரயிலில் ஹாஜி அலி தர்காவிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய செல்ஃபோனில் உடன் வந்த சிறுமி ஒருவர் பாட்டுக் கேட்டபடி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நபர் அவர் கையில் இருந்த செல்ஃபோனை பறித்துள்ளார்.
செல்ஃபோனை பறித்த நபர் ரயிலில் இருந்து இறங்கி ஓட முயற்சிக்க, அதைத் தடுக்கச் சென்றபோது பிலாலுக்கும், அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பிலாலை தள்ளிவிட்டுவிட்டு அந்த நபர் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். செல்ஃபோனை பறித்த நபர் தள்ளிவிட்டதில் தடுமாறி கீழே விழுந்த பிலால் மீது நொடியில் ரயில் ஏறியுள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த ரயில் நிலையத்தில் சிறுமிகள் இறங்கி நடந்ததைக் கூறியதும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிலாலை மீட்ட காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பிலாலைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமிகள் கூறிய அடையாளத்தையும், சிசிடிவி காட்சிகளையும் வைத்து குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ள காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.