வேலைக்கு சென்ற கணவர்... வீட்டுக்கு திரும்பாததால்... சந்தேகமடைந்த கர்ப்பிணி மனைவிக்கு... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 22, 2020 06:36 PM

ஏலகிரி மலையில் பணிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupattur Man decayed body found in yelagiri hills

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் முத்துக்குமார் (30). இவர் ஜோலார் பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஷகிலா என்ற மனைவியும் ராகுல்(4), ரவி (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மேலும் அவரது மனைவி ஷகிலா தற்போதும் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி ஏலகிரி மலையில் மின்சார  பராமரிப்பு பணிக்கு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் மலை அடிவாரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வழக்கம்போல் பொன்னேரியை சேர்ந்த சக தொழிலாளி முருகனுடன் அவரது பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்றார். பின்னர் அன்று இரவு 8 மணியளவில் பணி முடித்துவிட்டு இருவரும் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் முத்துக்குமார் மட்டும் வீடு திரும்பவில்லை. வீட்டுக்கு வராத கணவர் முத்துக்குமாரை தேடி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஏலகிரி மலைக்கு சென்றனர். அப்போது மலை அடிவாரத்தில் முத்துக்குமாரின் பைக் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் முத்துக்குமாரை காணவில்லை. இதனால் பதறிப்போன முத்துகுமார் மனைவி ஷகிலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துகுமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஏலகிரி மலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்று போலீசார், இளைஞரின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது அது மாயமான முத்துக்குமார் என தெரிய வந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் முத்துக்குமார் உடல் அருகே ஒரு செல்ஃபோன், மின் சம்பந்தமான பொருட்கள், சரக்கு பாட்டில் மற்றும் ஒரு விஷ பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE #YOUTH