‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 02, 2020 07:07 PM

புத்தாண்டு அன்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணை துன்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai woman abuse by youth during New Year night

சென்னையில் புத்தாண்டு அன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், சார் என் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து என்னை பாலியல் ரீதியலாக துன்புறுத்துகிறார் என அழுதபடி தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் காவல் கட்டுபாட்டு காவலர்கள் அந்த போன் எண்ணின் முகவரியை விசாரித்துள்ளனர். அதில், ஆவடியை அடுத்த கரிமேடு அருகே உள்ள எம்.ஜி.ஆர் தெரு என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அந்த முகவரியில் உள்ள பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் உள்ள இளைஞர் தகாத முறையில் நடக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர் பெயர் முகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண்ணுக்கும், முகேஷுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ‘காவலன் செயலி’ குறித்த தகவலையும் அப்பெண்ணிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். புத்தாண்டு அன்று ஆவடியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #SEXUALABUSE #CHENNAI #WOMAN #YOUTH