ஆசை வார்த்தையால்... 11-ம் வகுப்பு மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த துயரம்... அதிர்ச்சியான பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 27, 2019 06:38 PM

கொடைக்கானலில் பள்ளிக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்று, 3 நாட்கள் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11th std female student kidnapped and harassed by youth

திண்டுக்கல் மாவட்டம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் மாணவி உள்ளரா என தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் எங்கேயும், கிடைக்காததால் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்த 24 வயதான கொத்தனார் ஜீவா மீது சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் தங்கள் புகாரில் கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் இருவரும் இருப்பதாக தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சென்று, அவா்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஜீவாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஜீவா பழகி வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை உடன் பள்ளி விடுமுறை விட்ட நிலையில், வெளியில் சென்று வரலாம் எனக்கூறி மாணவியை அழைத்துள்ளார்.

ஜீவாவின் பேச்சில் மயங்கிய அந்த மாணவியும் அவருடன் செல்ல சம்மதித்துள்ளார். இதை அடுத்து 3 நாட்களாக பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அழைத்துச் சென்றும், அறை எடுத்து தங்கியும் மாணவிக்கு ஜீவா பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜீவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #HARSSED #KODAIKANAL #STUDENT #YOUTH