காதல் மனைவியின் பழக்கத்தால்... ஆத்திரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு... கடைசியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 17, 2020 02:08 PM

தனது மனைவியுடன் தவறான பழக்கம் வைத்திருந்ததால், இளைஞர் ஒருவரை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man murdered by his relative due to affair on married woman

உத்திரமேரூர் கிழக்கு கம்மாள தெருவில், பொங்கல் தினத்தன்று இரவு, 8:45 மணியளவில், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் நடத்திய விசாரணையில், கொலையான இளைஞர், உத்திரமேரூர் தண்டுகார தெருவைச் சேர்ந்த மதன் (26) என்றும், மறைமலை நகரில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார் என்பது தெரிய வந்தது.

மேலும் மதனுக்கும், அதேத் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தசரசன் (30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தசரதனைப் பிடித்து நடத்திய விசாரணையில், உத்திரமேரூர் அடுத்துள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போது, தசரதனுக்கும், அவருடன் படித்த மதுராந்தகத்தைச் சேர்ந்த அஸ்வினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஓடிவிட்டநிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அதேத் தெருவில் வசிக்கும் தசரதனின் உறவுக்காரரான மதன், அடிக்கடி தசரதன் வீட்டிற்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தசரதனின் மனைவி அஸ்வினிக்கும், மதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தசரதனுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அஸ்வினியும், மதனும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு மாயமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அஸ்வினி மற்றும் மதன் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது மேல்மருவத்தூர்  காவல்நிலையத்தில் ஆஜரான அஸ்வினி, தனது கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதால், அவருடன் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் பொங்கலை கொண்டாட மதன் உத்திரமேருர் சென்றுள்ளார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த தசரதன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர், கம்மாள தெருவில் சென்ற மதனை, தசரதன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட தசரதன் அளித்த தகவலை தொடர்ந்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : #MURDER #HUSBANDANDWIFE