அக்காவின் கல்யாணத்திற்கு... துணி எடுக்கப்போன இளைஞர்... எலெக்ட்ரிக் ட்ரெயினில் சாகசம்... நொடியில் நடந்த கோரம்... பதறவைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 30, 2019 01:32 PM

அக்காவின் திருமணத்திற்கு துணி எடுக்கப்போன 20 வயது இளைஞர், ஓடும் மின்சார ரயிலில் வாசலில் தொங்கியபடி சாகசம் செய்தபோது, எதிரே இருந்த கம்பம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chilled video mumbai man died after stunts in electric train

மஹாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்தவர் டாக்சி ஓட்டுநரான நௌஷாத் கான் என்பவரின் மகன் தில்ஷாத் (20). சில மாதங்களுக்கு முன்புதான் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனது பெரியப்பா மகளின் திருமணத்திற்காக புது துணிகள் எடுக்க, கடந்த வியாழக்கிழமை அன்று கோவண்டிக்கு (Govandi) செல்ல, திவா - மும்ப்ரா (Diva - Mumbra) மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். இவருடன் இவரது நண்பரும் கூட சென்றுள்ளார். ரயிலில் பயணிகள் இல்லாதபோதும், ரயிலின் வாசலில் நின்றுகொண்டு சாகசம் புரிந்து வந்துள்ளார்.

இதனை ரயிலின் உள்ளே இருந்த அவரது நண்பர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். 16 நிமிடங்கள் சென்ற நிலையில், எதிரே வந்த கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில், இளைஞர் தில்ஷாத் அப்படியே ரயிலின் மீது தூக்கி எறியப்பட்டு பின் கீழே விழுந்தார். பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு, போலீசாரின் உதவியுடன், தில்ஷாத்தை அவரது நண்பர் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்னும் 23 நாட்களில், அதாவது ஜனவரி 21 அன்று பிறந்த நாள் வரும் நிலையில், தில்ஷாத் உயிரிழந்துள்ளார்.

தனது மகன் போன்று யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தில்ஷாத்தின் தந்தை, ‘வறுமையில் சிக்கித் தவித்து வரும் தங்களுக்கு, மகனுக்கு வேலை கிடைத்ததால் மிகவும் சந்தோஷத்தில் இருந்தோம். ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நாள் கூட நீடிக்காமல், மகனும் போய்விட்டான்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார். மின்சார ரயிலில் இதுபோல் சாகசம் புரியும் இளைஞர்களின் உயிரிழப்பு குறித்த போலீசாரின் அறிக்கையால் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #TAIN #YOUTH #MUMBAI #STUNTS