“பாட்டு பாடிக்கொண்டே கழுத்தை நெரித்து”.. 3 குழந்தைகளை “கொன்ற” 22 வயது “மான்ஸ்டர்” தாய்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 22, 2020 06:29 PM

அமெரிக்காவின் அரிஸோனா பகுதியில் உள்ள ஃபீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயது தாய் ரேச்சல் ஹென்றி (Rachel Henry).

Monster mom sang songs while murdering her 3 children

இவர் தனது 3 குழந்தைகளை இரக்கமின்றி, குழந்தைகளைக் கொல்லும் பதற்றம் சிறிதும் இன்றி, வீட்டில் மாமியார் மற்றும் கணவர் இருக்கும்போதே, அவர்களுக்குத் தெரியாமல் இயல்பாக கொன்றுள்ள சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. முதலில் தனது 3 வயது மகனின் கண் முன்னேயே, 1 வயது மகளை வீட்டின் அறைக்குள் வைத்து ரேச்சல் ஹென்றி கொன்றுள்ளார். அதன் பின் தன் மகனைக் கொல்வதற்காக முயற்சிக்க, அதற்குள் கதவை மாமியாரும் கணவரும் தட்டியுள்ளனர்.

அப்போது தான் கொன்ற மகளை படுக்கையைல் வைத்துவிட்டு, இயல்பாக கதவைத் திறந்து அவர்களிடம் தனது 7 வயது குழந்தையைக் கொடுத்துவிட்டு மீண்டும், ரேச்சல் தன் அறைக்கதவை தாழிட்டுக் கொண்டுவிட்டார். பின்னர் தனது 3 வயது மகனை துடிக்கத் துடிக்க பாட்டு பாடிக்கொண்டே கைகளால் நெரித்து கொன்றுள்ளார். எல்லாம் முடிந்து இயல்பாக தன் மாமியாரிடம் சென்று 3 வயது மகளை வாங்கி, பாலூட்டுவது போல, தூக்கிவந்து கொன்றுள்ளார்.

ரேச்சலின் நடத்தையில் சந்தேகித்த ரேச்சலின் கணவரும், மாமியாரும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வந்து விசாரித்தபோது ரேச்சல் உண்மையை ஒப்புக்கொண்டார். குழந்தைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரேச்சல் ஹென்றி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Tags : #MOTHER #CHILDREN