“3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!”.. “நடுங்க வைக்கும் சம்பவம்!”

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 16, 2020 09:47 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலியைச் சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கு ஊர்மிளா என்கிற பெண்ணுடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகியது.

Man kills his wife for carrying girl baby to give birth

இந்த தம்பதியருக்கு 11 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகிய ஊர்மிளா காணாமல் போனதாக, அவரது கணவர் ரவீந்தரகுமார் அளித்த புகாரை போலீஸார் விசாரித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரவீந்தரகுமாரின் மீதே போலீஸாருக்கு சந்தேகம் திரும்பியது.

ஆனால் அவரோ, தலைமறைவாகினார். அதன் பின், ஊர்மிளாவின் சகோதரி மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்று ரவீந்தர குமார்தான், தனது சகோதரியை கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரவீந்தர குமாரை கைது செய்தனர்.

அப்போது ஏற்கனவே தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தனது மனைவியின் வயிற்றில் இருப்பதும் பெண் குழந்தை என்பதால் பயத்தில் தன் மூத்த மகளின் கண் முன்னாலேயே மனைவியை அடித்துக் கொன்று, துண்டுதுண்டுகளாக வெட்டிஎரித்து, சாம்பலை வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டதாகவும் ரவீந்தர குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்திய ரவீந்தரகுமாரின் மூத்த மகள், தனது தந்தை அவரது உறவினருடன் இணைந்தே தன் தாயைக் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #HUSBANDANDWIFE #UTTARPRADESH