“நான் கேட்டது இதத்தான்!”... “அதுக்கு போய் குடும்பமே சேர்ந்து குரூரமா அடிக்குறாங்க”.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jan 08, 2020 08:55 PM
குஜராத்தின் அஹமதாபாத்தில் 22 வயது இளம் பெண், தனது கணவராலும் கணவரின் குடும்பத்தினராலும் சரமாரியாக தாக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளதும், அதற்கான காரணமும் அதிர வைத்துள்ளது.
குஜராத்தின் தனிலிம்டா பகுதியைச் சேர்ந்த இந்த பெண், கடந்த 2016-ஆம் ஆண்டு சர்கேஜி என்கிற நபரை திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்கினார். இந்தத் தம்பதியருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு, முதல் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பிறந்தது முதலே, அதிகக் கடனால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரின் நடத்தை சைகோ தனமாக மாறியதாகக் குறிப்பிடும், இந்த இளம் பெண், அதற்கும் முன்பாக, தனது கணவரிடம் பாலுறவு வைத்துக்கொள்ள கோரியுள்ளார்.
ஆனால் அதற்கு பிரம்மச்சரியத்திக்கு மனைவி தடையாக இருப்பதாகக் கூறி தனது கணவர் தன்னை குரூரமாகத் தாக்கியதாகவும், அதன் பின் அவரது வீட்டாரும் தன்னை தாக்கியதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.