காணாமல் போன மகள்... இளைஞரிடம் நடத்திய... விசாரணையின்போது... வெளிவந்த அதிர்ச்சி தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 09, 2020 10:04 AM

காதலிப்பதாகக் கூறி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடத்தியதாக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12th standard student kidnapped by youth in chennai

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதேப் பகுதியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவரை கடந்த மாதம் 21-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன வேன் ஓட்டுநரான கணேஷ் என்ற இளைஞர், சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்தவர், திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தைக் கூறி சென்னை அழைத்து வந்துள்ளார். பின்னர் 2 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து விட்டு, அதன்பிறகு சிறுமியை குஜராத் அழைத்துச் சென்று இளைஞர் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர்.

இதற்கிடையில், டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் கணேஷின் தாய் சுகாசினி, சிறுமிகளை வெளி மாநிலங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உதவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஏஜண்ட்களோடு தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது.

Tags : #YOUTH #KIDNAPPED