“ஐ டிராப்ஸை தண்ணீரில் கலந்து கொடுத்து மனைவி செய்த கொடூரம்!”... கணவருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 19, 2020 11:02 PM

நியூ யார்க்கின் வடக்கு கொரலினாவில் செவிலியர் ஒருவர்  தனது கணவர் குடிக்கும் குடிநீரில் கண்களுக்கு போடும் குறிப்பிட்ட வகையான ஐ-டிராப்ஸை கலந்து கொடுத்து கொன்றுள்ள சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

wife kills her husband by mixing specified eye drops in water

லானா சூ கிளேடன் (53) (Lana Sue Clayton) தனது கணவர் ஸ்டீபன்.டி.கிளேடன் (64) (Stephen D. Clayton) என்பவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடர்ந்து 3 நாட்கள் அவர் குடிக்கும் நீரில் குறிப்பிட்ட வகை ஐ-டிராப்ஸை கலந்து குடிக்க கொடுத்துள்ளார்.

இதனால் கிளேடன் உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட செவிலியர் லானாவுக்கு முதலில் மரண தண்டனை கொடுக்க ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில், அவ்வாறு கலந்து  கொடுத்ததாகவும், அந்த குறிப்பிட்ட வகை ஐ-டிராப்ஸ் தனது கணவருக்கு ஒரு உபாதையைக் கொடுக்கும் என்று மட்டுமே கற்பனை பண்ணியதாகவும், அது அவரின் உயிரையே பறிக்கும் என்பதை தான் எள்ளளவிலும் எதிர்பார்க்கவில்லை என்று லானா கூறியுள்ளார்.

மேலும் லானாவிற்கு  மன உளைச்சல் கோளாறு ( Post Traumatic Stress Disorder) இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனால் லானாவுக்கு 25 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Tags : #HUSBANDANDWIFE