‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 16, 2020 08:52 AM

துப்பாக்கியை வைத்து டிக்டாக் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதாமாக் துப்பாக்கி குண்டு துளைத்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teen dies as gun accidentally goes off during Tik Tok shoot

உத்தரப் பிரதேச மாநிலம் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ அதிகாரி வீரேந்திர குமார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கேஷ்வ் (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். சம்வத்தன்று தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்த தாய் காயத்ரி இதற்கு மறுப்பு தெரிவித்து மகனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளார்.

நீண்ட நேரமாக தாயிடம் கெஞ்சி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி பதறி அடித்துக்கொண்டு கேஷவ் அறைக்கு சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கேஷவ் கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது  டிக்டாக் வீடியோ செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து இறந்தது தெரியவந்துள்ளது.

Tags : #CRIME #TIKTOK #GUN #DIES #YOUTH