'மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்!'.. 'சீக்கிரமா வந்துடுங்கக்கா!'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 22, 2019 12:00 PM

டிக்டாக் செயலி மூலம் ஆடல், பாடல், நடிப்பு என தனித்திறன்களை வெளிக்கொணர முடிவதாலும், ஒரு தன்னம்பிக்கை கிடைப்பதாலும், பொதுவெளியில் தத்தம் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என ஏங்கித் தவிக்கும் பலரும் டிக்டாக்குகளை பயன்படுத்துவதுண்டு.

tiktok woman user cries before she left from the app

இதில் பலருக்கு நண்பர்கள், சொந்தக்காரர்கள், நலம் விரும்பிகள் என எல்லாருமே அந்த செயலிகள் மூலம் தம்மிடையே பேசுபவர்கள்தான். ஆண்களைப் போல் வெளிப் பணிகளுக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்து முடங்கிக் கிடப்பதாக உணரும் பல பெண்களும் இப்படியான செயலிகளின் மூலம் தமக்கு மார்க் போடுபவர்களையே நட்பு வட்டாரமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படித்தான் பெண் ஒருவர், தனது மொபைல் வேலை செய்யாததால் புதிய மொபைல் வாங்கிவிட்டுதான் டிக்டாக்குக்கு வர முடியும், என்றும் அதனால் அதுவரை உங்களை எல்லாம் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறேனோ என்றும் கூறி தேம்பித் தேம்பி அழுது விடைபெறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் அதுவரை தன் பதிவுகளுக்கு லைக், ஷேர், கமெண்ட் கொடுத்து தனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்லி உருகுகிறார். கண்களில் இருந்து காட்டாறு போல் நீர் சுரந்து அழும் இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIDEOVIRAL #TIKTOK #WOMAN