'நீ பாடும்மா செல்லம்'... 'ட்யூனா முக்கியம்'..'அதுவும் அந்த வெட்கச்சிரிப்பு வேற லெவல்'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Nov 11, 2019 11:44 AM

குழந்தைகள் எது செய்தாலும் அற்புதம்தான். எந்த எதிர்காலக் கவலையும், கடந்த கால எண்ணங்களும் இல்லாமல் நிகழ்காலத்தில் விழிப்புடனும் ரசிப்புத் தன்மையுடனும் இருக்கும் குழந்தைகள் செய்வது எல்லாமே வேற லெவல்தான்.

TN cute female child sings video goes viral on social media

அண்மையில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில்  இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் பலரையும் கவர்ந்தது. அந்த பாடலை பாடாத பாடகர்களும் பாடல் பயிற்சி பெறுபவர்களும் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பாடாத போட்டியாளர்களுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அப்பாடல் பிரபலமாகிவிட்டது.

சித் ஸ்ரீராம் குரலில் பாடப்பெற்ற அப்பாடலைக் கேட்கவும் பாடவும் ரசிக்கவும் இத்தனை ரசிகர்கள் பெருகிவிட்ட நிலையில், ஒரு குடும்பம் தங்கள் வீட்டு சுட்டி பெண் குழந்தையிடம் அப்பாடலை, பாடச் சொல்லி கேட்டு மகிழ்கின்றனர். குறும்புமிக்க அந்த பெண் குழந்தை, கைகளில் மைக் வைத்துக்கொண்டு அப்பாடலை ஒரு ராக் சிங்கர் போல், அவரது இஷ்டத்துக்கு டியூன் எல்லாம் மாற்றி பாடுகிறார்.

பாடிவிட்டு அனைவரையும் தனது வசீகர சிரிப்பால் கவர்கிறார்.  இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIDEOVIRAL #CHILD