‘ஆண் நண்பருடன்'... 'காரில் வந்திறங்கிய இளம் பெண்’... ‘மடக்கிப் பிடித்து’... ‘உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 11, 2019 05:45 PM

இளம்பெண் ஒருவரை காரில் இறக்கிவிட வந்த ஆண் நண்பரை சுற்றி வளைத்து, அப்பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும், சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

Relatives of a young woman who had assaulted a male friend

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது தீவட்டிப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண் நண்பர் காரில் அழைத்து வந்து, அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்த, அந்தப் பெண்ணின் உறவினர்கள், இளைஞரான ஆண் நண்பரின், காரை மடக்கிப் பிடித்து வழிமறித்துள்ளனர். பின்னர், அந்த இளைஞருடன், இளம்பெண்ணின் உறவினர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் சிறிது நேரத்தில், அந்த இளைஞர், தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, அதே காரில் மீண்டும் இளம் பெண்ணின் வீட்டருகே வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த காரை சுற்றி வளைத்த, பெண்ணின் உறவினர்கள், காரிலிருந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதோடு நில்லாமல், காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், எதனால் பிரச்சனை என்பது தொடர்பாக, தீவட்டிப்பட்டி போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MAN #WOMAN #SALEM