தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 21, 2019 12:48 PM

ரயில் தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman dead body found near railway track in Salem

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ரயில் தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இதனிடையே நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரது மனைவி குல்ஜார் என்பவது தெரியவந்துள்ளது. தண்டவாளத்தின் அருகே சடலம் கிடந்ததால் ரயிலில் அடிபட்டு இறந்திறக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் குல்ஜார் தகாத உறவில் ஈடுபட்டதால் கொலை செய்யபட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே கொலையா? இல்லை தற்கொலையா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #CRIME #SALEM #MURDER #WOMAN