'அவரு ஆண் இல்ல'.. 'மைனர் பெண்களை' மயக்கி.. வலையில் வீழ்த்திய 32 வயது பெண்.. கணவர் தற்கொலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 13, 2019 11:57 AM

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் 32 வயது மதிக்கத் தக்க பெண்மணி சுமலதா என்பவர், சாய் ரமேஷ் ரெட்டி என்கிற பெயரில் ஆண் வேடம் தரித்து, மைனர் பெண்களை மயக்கி அவர்களை பாலியல் இச்சைக்கு இணங்கச் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு 17 வயது பெண்ணை தன்னுடனே வசிக்குமாறுச் சொல்லி வசியம் செய்துள்ளார்.

woman aged 32, pretends to be Man and abuse minor girls

இதற்கென அந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள தனது ஆண் நண்பரையும் மனம் மாற்றியுள்ளார். அதன் பிறகு 3 பேரும் ஒரு வீட்டில் வாழலாம் என்கிற யோசனையில் சுமலதா இதைச் செய்துள்ளார். ஆனால் அதற்குள் சுதாரித்த அந்த 17 வயது மைனர் பெண், பெற்றோர் மூலம் போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் தான், சாய் ரமேஷ் ரெட்டி என்கிற பெயரில் உலவிவந்தது சுமலதா என்றும், இவரின் பாலியல் வேட்கைக்கு பல மைனர் பெண்கள் இரையாகியிருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இவரது இந்த நடவடிக்கைகள் தெரியவந்ததை அடுத்து மனம் நொந்து போன இவரது 3வது கணவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலையும் செய்துகொண்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #WOMAN #MINOR GIRLS