‘100 வயதைக் கடந்தும் மாறாத அன்பு’... ‘கணவன்-மனைவிக்கு நேர்ந்த சோகம்’... ‘இணைபிரியா தம்பதியை நினைத்து’... ‘கண்ணீர் விட்ட உறவினர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 12, 2019 07:33 PM

கணவர் உயிரிழந்த துக்கத்தில், மாறாத அன்பு கொண்ட மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

old man and woman died subsequently in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (104). இவரது மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளநிலையில், பேரன் - பேத்தி, கொள்ளு பேரன் - பேத்திகள் என மொத்தம் 23 பேர் இருக்கின்றனர். 100 வயதை கடந்து விட்டாலும், யாருடைய உதவியும் இன்றி முதிய தம்பதி, மகன் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டு வேலைகளை அவர்களே கவனித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று இரவு, வெற்றிவேலுவுக்கு திடீரென நெஞ்சுவலி  ஏற்பட்டு, சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். இதற்கிடையில், கணவர் இறந்ததை அறிந்த மனைவி பிச்சாயி மிகவும் சோகத்துடன், கணவர் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை அவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேற்றியும், கலங்கிகொண்டிருந்தஅவர், சோகத்தில் அழுதுகொண்டே இருந்தார். இதனால் மேலும் சோர்வடைந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இறப்பிலும் இணை பிரியாத தம்பதியை பார்த்து உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். வெற்றிவேலும் - பிச்சாயியும் 100 வயதை கடந்த நிலையிலும் அன்போடு பழகி வந்ததுடன், யாருக்கும சிரமமின்றி, அவர்களது வேலையை அவர்களே செய்து வந்ததாக, உறவினர்கள் கூறியுள்ளனர். 

Tags : #100 #YEARS #OLD MAN #WOMAN