'லிஃப்ட் கொடுத்து'.. 'ஓடும் காரில் பலாத்காரம் '.. 'ரோட்டில் வீசப்பட்ட பெண்'.. பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 08, 2019 04:23 PM

காரில் லிஃப்ட் கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்து சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ள இளைஞர்களின் செயல் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman assaulted in a moving car and dumped on public

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது குர்தா மாவட்டம். இங்கு இளம் பெண் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு லிஃப்ட் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்கிற மனநிலையுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த இளைஞர்கள் அப்பெண்ணுக்கு லிஃப்ட் தருவதாக கூறியுள்ளனர்.

அதை நம்பி ஏறிய இளம் பெண்ணை அந்த காரில் இருந்த 2 பேர் இருந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் ரோட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்போது மயங்கிய நிலையில், கிழிந்த ஆடைகளுடன் தவித்த பெண்ணை போலீஸாரின் உதவியோடு பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின்னர் அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்யப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags : #ODISHA #WOMAN #YOUTH #CAR