'இளம் பெண் மீது பலாத்கார முயற்சி'.. அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களால், மேலும் நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 16, 2019 10:20 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு, செக்டார் 63 பகுதியிலுள்ள  ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் சந்திக்க சென்ற நபரே, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.  அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த இருவர் அப்பெண்ணை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அதன்பின் அந்த பெண்ணை காப்பாற்றிய நபர்கள் இருவரும், அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman saved from strangers and abused by the helpers

இச்சம்பவம் குறித்து நொய்டா பகுதி காவல்துறையினர், ‘பாதிக்கப்பட்ட பெண் வேலைவாய்ப்பு தொடர்பாக பேசுவதற்காக, கடந்த புதன்கிழமை ரவி என்பவரை சந்திக்க பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது ரவி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை ரவியிடமிருந்து இரண்டு நபர்கள் காப்பாற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் மூன்று பேரை அழைத்து, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அப்பெண், இரவு 9.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த தகவலை வைத்து ரவியை நாங்கள் கைது செய்தோம்.

மேலும் ரவி கூறிய தகவலை வைத்து பிரிஜ்கிஷோர், பிரிதம், உமேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தோம். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குட்டு மற்றும் ஷாமு ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவருமே பூங்கா அமைந்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தப் பெண்,  தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என தெரிவித்தனர்.

Tags : #POLICE #WOMAN