‘நம்பி போன இளம்பெண்’! ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இருவர்..! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 19, 2019 11:57 AM
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 4ம் தேதி தனது அண்ணனுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அவர் தனக்கு பழக்கமான சந்தீப், கிஷோர் என்ற இருவரை சந்தித்துள்ளார். அவர்கள் அப்பெண்ணுக்கு உதவுவதாக கூறி, ‘கட்டிட வேலை இருக்கிறது. வந்தால் சம்பளம் கிடைக்கும். நாளைக்கு வா’ என கூறியுள்ளனர்.
இதனை நம்பி மறுநாள் சென்ற அப்பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனால் வீட்டுக்கு சென்ற அப்பெண் இதுகுறித்து தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். உடனே இருவரும் காவல் நிலையத்தில் சென்று போலீசாரிடம் இதனை தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் எழுதி தரக் கூறியதாகவும், தயங்கிய அப்பெண் ஊர்காரர்களிடம் விசாரித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.
சில நாட்களில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஊர் முழுவதும் பரவியுள்ளது. இதனை அடுத்து ஊர் பஞ்சாயத்து கூடியுள்ளது. அங்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட சந்தீப், கிஷோர் ஆகிய இருவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையம் சென்றதால் ஊர் மானம் போய்விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக புகார் வரவில்லை என தெரிவித்த போலிசார், பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.