'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 15, 2019 12:04 PM

சாலையை கடந்த மூதாட்டி மீது, வேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

old woman thrown out in car accident in rajapalayam bus stop

மதுரையைச் சேர்ந்தவர் சுமார் 60 வயதான விஜயராணி என்ற மூதாட்டி. இவர், ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளார். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும், தனது ஊருக்கு கிளம்பி செல்வதற்காக, பேருந்தில் ஏற ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த வியாழக்கிழமை மதியம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தளவாய்புரம் நோக்கி சென்ற கார் ஒன்று, வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும்நிலையில், மூதாட்டியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையில், விபத்துக்கு காரணமான கார் உரிமையாளருடன், மூதாட்டியின் உறவினர்கள், சமாதானத்துடன் சென்றுவிட்டதால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் ‘நியூஸ்7’ சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #ACCIDENT #MADURAI #WOMAN