பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்..! ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’! பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 21, 2019 09:05 AM

தகாத உறவை முறித்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man attacks woman and commits suicide for illegal affair in Tuticorin

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துளுக்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (30). இவர் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு முருகன் என்பவரது மனைவி பகவதி (29) பணியாற்றியுள்ளார். அப்போது ரமேஷ்பாபுக்கும், பகவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பகவதியின் கணவர் முருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல வேண்டாம் என அவர் எனக் கூறியுள்ளார். இதனால் பகவதி இரும்புக்கடைக்கு சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் ரமேஷ்பாபுவுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலைக்காக தூத்துக்குடி வந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பகவதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்துள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் பகவதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே ரமேஷ்பாபுவை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். உடனே அவர் அருகில் இருந்து விவசாய நிலத்தில் இறங்கி ஓடியுள்ளார். அப்போது ரமேஷ்பாபு கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமேஷ்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். பகவதி ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த பகவதிக்கு இரண்டு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRIME #TUTICORIN #SUICIDEATTEMPT #ILLEGALAFFAIR #WOMAN